search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector surprise inspection"

    • மாணவர்களை ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார்
    • மதிய உணவை சாப்பிட்டு தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளி பகுதிநேர நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் பொதுமக்களிடம் உங்களுக்கான ரேசன் பொருட்கள் சரியான நேரத்தில் தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பொது மக்கள் கூடுதலாக கோதுமை வழங்கினா மேலும் இருப்பில் வைக்கப்ப ட்டுள்ள பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய குடிமை பொருட்களின் எடைகள் சரிபார்த்தார்.

    அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டம் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வகுப்பு மாணவர்களை கலெக்டர் ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார்.

    மேலும் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவு சாப்பிட்டு சமையல் எப்படி உள்ளது என்பது குறித்து ருசித்து பார்த்து மாணவர்களுடைய கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், நியாய விலைக்கடை விற்பனை யாளர்கள், பள்ளிஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தூய்மையாக வைத்துகொள்ள உத்தரவு
    • சமையலருக்கு அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் விடுதியில் உள்ள சமையலறை மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு சுத்தமாக சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க வேண்டும் என சமையலருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் இவ்விடுதி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ஹரிதாஸ், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் த.பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலைய கடைகள் ஏலம்
    • கோவில் அருகே உள்ள நுழைவாயில் வழியாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தார். மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது;

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கடைகளை ஏலம் விடுவது குறித்து மாநகராட்சி முடிவு செய்யும். மேலும் தற்காலிகமாக கடைகள் அமைப்பது குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள்.

    தடுப்பு சுவர் அகற்றப்படும்

    பஸ் நிலையம் சுத்தமாக உள்ளது மேலும் சில பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கால்வாய் அமைத்து பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்கப்படும்.

    இதன்மூலம் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்.புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாதையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் முழுவதுமாக அகற்றப்படும்.

    காட்பாடி குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே வருவதற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிகிச்சை குறித்து பல்வேறு புகார்கள்
    • கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்கள் இறந்து விடுவதாகவும், நோயாளி களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனவும், போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்லை எனவும், பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

    இதனை அடுத்து நேற்று திடீரென வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, உள்நோயாளிகள்‌ சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோய்கள் கர்ப்பிணி களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.

    பின்னர் உடன் அரசு மருத்துவமனை டாக்டர்கள். சிவசுப்ரமணியன், செந்தில்குமார், சத்யபாக்கியலட்சுமி, டேவிட் விமல்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் மருத்துவமனையில் உள்ள நிலைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    ×