search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் குமார வேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • பஸ் நிலைய கடைகள் ஏலம்
    • கோவில் அருகே உள்ள நுழைவாயில் வழியாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தார். மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது;

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கடைகளை ஏலம் விடுவது குறித்து மாநகராட்சி முடிவு செய்யும். மேலும் தற்காலிகமாக கடைகள் அமைப்பது குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள்.

    தடுப்பு சுவர் அகற்றப்படும்

    பஸ் நிலையம் சுத்தமாக உள்ளது மேலும் சில பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கால்வாய் அமைத்து பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்கப்படும்.

    இதன்மூலம் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்.புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாதையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் முழுவதுமாக அகற்றப்படும்.

    காட்பாடி குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே வருவதற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×