search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaiman Vasumathi Ambasankar"

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 1-வது மற்றும் 2-வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டு குடிநீர்

    கூட்டத்தில் யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசியதாவது:-

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய பொது நிதியில் அல்லிக்கு ளம் ஊராட்சியில் திருவ னந்தபுரம் முருகன் நகரில் கூட்டு குடிநீர் திட்டத்தில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்தல், ஆண்டாள் நகர் அம்பாள் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி இந்திரா நகர் கால்நடை மருத்துவமனை சாலையில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் ஒரு லட்சம் லிட்டர் சம்ப் அருகில் போர்வெல் அமைத்தல், கூட்டுடன்காடு தெற்கு தெருகளில் சிமெண்ட் தளம் அமைக்கப்படுகிறது.

    மேல கூட்டுறன் காடு தெற்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நேரு காலனி முதல் சமீர் வியாஸ் நகர் வரை இணைப்பு சாலை அமைத்தல், வடக்கு குறுக்கு தெரு மற்றும் சிறு, குறு முட்டுச்சந்து தெருக்களில் பேவர் பிளாக் சாலை, கோமாஸ் புரம் மற்றும் தாளமுத்து நகர் ரோசம்மாள் பஸ் நிறுத்தம் முதல் சவேரியார்புரம் வரை புதிய தார்சாலை, சேசு நகர், இந்திரா நகரில் புதிய சாலை, வண்ணார்பேட்டை முதல் தெருவில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    பூப்பாண்டிபுரம் பகுதியில் 3 இடம்,வி.வி.டி. தொடக்கப் பள்ளி அருகில், ஆரோக்கியபுரம் கெபி அருகில், ரேஷன் கடை அருகில், தாய் நகரில் அடி பம்புகள் அமைத்தல், சுனாமி காலணியில் கிணறுகள்,

    பூபாண்டியாபுரம், சமீர்வியாஸ்நகர் பகுதி யில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல், முடி வைத்தானேந்தல் ஊராட்சி யில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் முள்ளக்காடு ஊராட்சி பொட்டல்காடு கிராமத்தில் 1-வது மற்றும் 2-வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது.

    கோரம்பள்ளம் ஊராட்சி யில் பெரிய நாயகபுரம் கிராமம், காமராஜ் நகர், அந்தோனியார்புரம் கொடிமர தெருவில் புதிய சாலை அமைத்தல், ஆபிர காம் நகரில் வெள்ளநீர் வெளியேற பம்ப் ரூம் மற்றும் மோட்டார் மின் வசதி அமைத்தல் உட்பட வளர்ச்சிப் பணிகள் குறித்தும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை கள், மேலும் அனைத்து பணிகளும் அனைத்து ஊராட்சி பகுதிக்கும் முறைப்படுத்தி முறையாக நடைபெறும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 46 தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. பின்னர் அந்தோணி தனுஷ்பாலன் உட்பட கவுன்சிலர்கள் தங்கள் பகுதி தேவைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்துமாலை, தொம்மை சேவியர், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துலட்சுமி, செல்வபார்வதி, முத்துக்குமார்,பொறியாளர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 12-வது வார்டு ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை ஒன்றிய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து நர்மதா கூறுகையில் எனக்கு அரசு பணி கிடைக்க இருப்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

    ×