search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bsp minister mahesh"

    கர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். #Karnataka #BSP #Mahesh
    பெங்களூரு:
     
    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்தது.

    போட்டியிட்ட 20 இடங்களில் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து, கொள்ளேகால் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் என்.மகேசுக்கு பள்ளிக் கல்வித்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே இருந்த கூட்டணி உறவில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் முதல் மண்டிரி குமாரசாமியை பெங்களூருவில் சந்தித்துப் பேசிய மந்திரி என்.மகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கினார்.
     
    அந்த கடிதத்தில், சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக முதல் மந்திரி குமாரசாமிக்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தொகுதியில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை. குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளார். #Karnataka #BSP #Mahesh
    ×