search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat ride"

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர் வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிபடியாக குறைந்து 18 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக வந்தது. நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிப்பெருக்கு விழா தொடங்க உள்ளது. இந்த விழா இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    ஆடிபெருக்கையொட்டி ஒகேனக்கல்லில் இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனாலும் மெயினருவில் வெள்ளபெருக்கின்போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டதால், அருவியில் குளிக்க பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் மெயினருவில் மட்டும் குளிப்பதற்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கை யொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். அவர்கள் குளிப்பதற்காக மெயினருவி செல்லும் பாதையின் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர்.

    இதுபோன்று காவிரி ஆற்றங்கரையோரம் முறையான தடுப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று இன்று முதல் பரிசல் இயக்கவும் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இன்று காலை மாற்றுவழி பாதையான கோத்திக்கல் பாறையில் சப்-கலெக்டர் சிவனஅருள் மற்றும் முன்னாள் மாவட்ட சேர்மன் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் பரிசலை இயங்கி தொடங்கி வைத்தனர்.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க காவிரி ஆற்றங்கரையோரம் மற்றும் குறைவாக நீர் செல்லும் பாதையில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் குளிக்க தடைவிதிக்கப்படும். தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

    இதுபோல் பரிசல் இயக்க வழக்கமாக ஊட்டமலை, மாமரத்துகவுடு, கோத்திக்கல்பாறை ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் மாமரத்துகடுவு பகுதியில் 4 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேலும் அதிகமானல் பரிசல் இயக்க மீண்டும் தடைவிதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 26 நாளாக ஒகேனக்கல்லில் வந்து குளிக்க முடியாத தவித்து வந்த சுற்றுலாபயணிகள் இன்று ஆடிப்பெருக்கு நாளில் மகிழ்ச்சியாக குளித்தும், பரிசலிலும் பயணித்தனர். #Hogenakkal #Cauvery



    ஒகேனக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை.
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பியது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த கன மழையால் கர்நாடகா அணையான கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவு எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இன்று 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, காவிரி கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×