என் மலர்

  நீங்கள் தேடியது "Block development"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுதந்திர தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலராக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகனை தேர்வு செய்து விருது வழங்கினார்.
  • இதனை பாராட்டி கூட்டமைப்பு சார்பில் பி.டி.ஓ. திருமலை முருகனை சால்வை அணிவித்து அவருக்கு குத்து விளக்கு பரிசளிக்கபட்டது.

  கடையம்:

  தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பூமிநாத், அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலராக கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைமுருகனை தேர்வு செய்து விருது வழங்கினார். இதனை பாராட்டி கூட்டமைப்பு சார்பில் பி.டி.ஓ. திருமலை முருகனை சால்வை அணிவித்து அவருக்கு குத்து விளக்கு பரிசளிக்கபட்டது. நிகழச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், முதலியார்பட்டி முகைதீன் பீவி அசன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி,மேலாம்பூர் குயிலி லட்சுமணன்,பாப்பான்குளம் முருகன், வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், அடைச்சாணி மதியழகன், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், திருமலையப்பபுரம் மாரியப்பன், துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், வெங்காடம்பட்டி ஸாருகலா ரவி, கீழாம்பூர் மாரிசுப்பு, தர்மபுரமடம் ரூஹான் ஜன்னத் சதாம், மந்தியூர் கல்யாணசுந்தரம், பொட்டல்புதூர் கணேசன் மற்றும் யூனியன் ஒபந்ததாரர்கள், யூனியன் பணியாளர்கள், தெற்கு கடையம் வார்டு உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். தெற்கு கடையம் ஊராட்சி செயலர் பழனியப்பன் நன்றி கூறினார்.

  கூட்டமைப்பு கூட்ட ஏற்பாடுகளை தெற்கு கடையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து லெட்சுமி ராமதுரை செய்திருந்தார்.

  ×