search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "biporjoi cyclone"

    • குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
    • குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.

    அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

    பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது.

    சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.

    இதைதொடர்ந்து, புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளனர்.

    1,600 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ஜூனாகத் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

    பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மாநில அரசு விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணப் தொகை குறித்து அறிவிக்கும்.

    புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டன.

    முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் ஓரிரு நாட்களில் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சகம், குஜராத் அரசு மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இந்த பேரழிவிலிருந்து குறைந்தபட்ச சேதத்துடன் வெளிவருவது பயனுள்ள குழுப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×