search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru Mayor"

    பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பெண்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #Congress #BengaluruMayor
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சியில் மேயராக பதவி வகிப்பவர் சம்பத்ராஜ். இவரது பதவிக்காலம் வருகிற 27-ந் தேதி நிறைவடைய உள்ளது. வருகிற 28-ந் தேதி மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழாண்டு மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜே.டி.எஸ். சுயேட்சைகளின் ஆதரவுடன் மாநகராட்சியில் அதிகாரத்தை பிடித்து காங்கிரஸ் கட்சி, இந்த முறையும் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை மேயராக தேர்ந்தெடுக்க திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த ஒருவரை மேயர் ஆக்க வேண்டும் என்று அந்த கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இதனால் பெங்களூரு மாநகராட்சியில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்பதில் அந்த கட்சியினர் பிடிவாதமாக உள்ளனர்.

    பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த சாந்தி நகர் வார்டு உறுப்பினர் சவுமியா சிவக்குமார், ஜெயநகர் வார்டு உறுப்பினர் கங்காம்பிகே இடையே கடும் போட்டி நிலவுகிறது.



    2016-ம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்மாவதிக்கும், சவுமியா சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது காங்கிரஸ் கட்சி மேலிடம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து போட்டியில் இருந்து சவுமியா சிவக்குமார் விலகிக் கொண்டார்.

    சட்டசபை தேர்தலில் சாந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹாரீஷ் வெற்றி பெற்றார். அவருக்கு மந்திரி சபைபயில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டணி ஆட்சி என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே தனக்கும் அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை சேர்ந்த ஆதரவாளர் சவுமியா சிவக்குமாருக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் ஹாரீஷ் உறுதியாக உள்ளார்.

    சவுமியா சிவக்குமார் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர். கங்காம்பிகே லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது ஒக்கலிகா சமுதாயத்தை சேர்நத நாகராஜ் மேயராக பதவி வகித்தார். அதன் பின்னர் அந்த சமுதாயத்தை சேர்ந்த யாரும் மேயராகவில்லை. பெங்களூருவில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 29.3 சதவீதம் பேர் வசித்து வரும் நிலையில், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    முதல்-மந்திரி குமாரசாமியும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு தந்தாலும், அந்த கட்சியில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்த கங்காம்பிகேவிற்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அகில பாரத வீரசைவ மகாசபையின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஷாம்னூர் சிவசங்கரப்பா அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    இதனால் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்- மந்திரியும், பெங்களூரு வளர்ச்சி துறை மந்திரியுமான பரமேஸ்வர் ஆகியோருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. என்றாலும் காங்கிரஸ் கட்சியில் மேயர் பதவிக்கான போட்டியில் சவுமியா சிவக்குமார் வெற்றி பெற அதிக அளவு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #Congress #BengaluruMayor
    ×