search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beach Park"

    • தூத்துக்குடியில் சீரமைக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.
    • விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் முத்துநகர் கடற்கரை பூங்கா மேம்படுத்தும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டு பேசினார். அவர் பேசும்போது, உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் கடலில் காலை நனைக்க விரும்புவார்கள் அந்த விருப்பம் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, இந்தப் பூங்கா முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரமாக பயன்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இங்கே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய மேடையில் இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தங்களுடைய திறமைகளை வெளிக ்கொண்டுவர பயன் படுத்திக்கொள்ளலாம். அரசியல், சாதி, மத, நிகழ்ச்சிகள் தவிர அனைத்து வகையான நிகழ்ச்சிகளும் இங்கே நடத்திக் கொள்ளலாம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் விரைவாக நிறைவு படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பூங்கா மிக விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளது, நாங்கள் பொறுப்பு ஏற்ற 90 நாளில் திட்டத்தை நிறைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளோம்.

    இதற்காக கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ மற்றும் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் தூத்துக்குடி மாநகரையும் இந்த கடற்கரை பூங்காவையும் தூய்மையாக வைத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகரப் பகுதி தி.மு.க. செயலாளர்கள், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம், நகரமைப்புக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், அதிகாரிகள் மேயரின் உதவியாளர்கள் மற்றும் டாக்டர் சோமசுந் தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


    ×