search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Competition"

    • கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் “வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது.
    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாணவ, மாணவி களிடம் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "வாக்களிப்பதன் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். போட்டியில் 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் 3-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் பிரசாந்த் முதலிடமும், இயந்திரவியல் துறை மாணவர் விஸ்வாமணி 2-ம் இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர் சின்னத்தம்பி 3-ம் இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாசலம், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் பாலமுருகன், இயந்திரவியல் துறை விரிவுரையாளர் வையண பிரகாஷ் செய்திருந்தனர்.

    ×