search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver murder"

    வீட்டில் தூங்கிய ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று காலை மது போதையில் இருந்த அவர் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் வீட்டிலேயே தூங்கினார்.

    இதையடுத்து தேவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள அறையில் கணவர் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் கல் போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த போது ராஜேந்திரனின் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கும், மகன் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் விளையாடவும் சென்றுவிட்டனர். இதனால் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து சென்றது எப்போது என்று தெரியவில்லை.

    கொலையுண்ட ராஜேந்திரனின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தேவியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதே போல் தேவியும் முதல் கணவரை பிரிந்து ராஜேந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்ல. பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.


    ஆட்டோ டிரைவர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கியதால், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    இரணியல் அருகே மேற்கு நெய்யூரைச் சேர்ந்தவர் ரூபன்டேனி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த மாதம் 14-ந்தேதி சவாரிக்கு சென்ற ரூபன்டேனி மாயமானார். இது குறித்து அவரது தந்தை சுந்தர்ராஜ் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரூபன்டேனியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ரூபன் டேனி கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டு இருப்பதாக தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ரூபன் டேனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலை வழக்கில் ரூபன்டேனியின் நண்பர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட பிரபல ரவுடி மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது.

    பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் கூறுகையில், கடந்த மாதம் ரூபன்டேனியை சவாரிக்காக அழைத்துச் சென்றோம். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினோம். பின்னர் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரூபன்டேனியை வீசிச் சென்றோம் என்றனர். இவர்கள் 3 பேரும் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதையடுத்து கடந்த மாதம் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணம் கிடந்ததாக கூறி பறக்கின்கால்மடம் பகுதியில் புதைத்ததாக கூறினார்கள். எனவே புதைக்கப்பட்ட வாலிபர் ரூபன்டேனியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட ரூபன்டேனி ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆட்டோ டிரைவர் கொலையில் அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஹரிஷ் (5), ஆதித்யா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் செந்தில்குமார் வீட்டில் கட்டில் அருகே தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மரியபுஷ்பம் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகரில் டாஸ்மாக் கடை அருகே தனது கணவர் செந்தில்குமாருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் தாக்கப்பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது செந்தில்குமார் தாக்கப்பட்டதில் காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்ற உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிக போதையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் பலர் சேர்ந்து தாக்கியதில் செந்தில்குமார் இறந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    ×