search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvENG"

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 208 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 200 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெர்த்:

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹேல்ஸ் 84 ரன்னும், பட்லர் 68 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டேவிட் வார்னர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் 36 ரன்னும், ஸ்டோய்னிஸ் 35 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இங்கிலாந்து 1- 0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், டோப்ளே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×