search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Astronomy"

    • வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.
    • வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர்களுக்கு வானியல் நோக்கும் நிகழ்ச்சி (ஸ்கை வாட்ச்) நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணி முதல் தொலை நோக்கியின் வாயிலாக வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.

    பழங்கால மக்கள் இரவு நேரப்பயணங்களின் போது நட்சத்திரங்களின் துணையுடன் தான் வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்துகொண்டனர்.

    வானியல் ஆய்வாளர் உமாசங்கர் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து வானியல் தொடர்பான கருத்துகளை மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா மற்றும் ஆசி–ரி–யர்–களும் கலந்துகொண்டனர்.

    ×