search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi Building"

    கோவை மாவட்டம் குன்னத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ரூ 8.5 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
    அன்னூர்:

    அன்னூர் ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா தலைமையில் நடந்தது. அன்னூர் தாசில்தார் ராஜன் வரவேற்றார்.

    விழாவில் குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பொகளூர் பஞ்சாயத்து கோபிராசிபுரத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பச்சாபாளையம் பஞ்சாயத்து மோளபாளையத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், நாராணபுரம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், காரேகவுண்டன் பாளையம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

    திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா பேசும்போது, அன்னூர் ஊராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கை தயாரிக்கப்படும்.

    தற்போது கோடை மழை பெய்து வருகிறது. தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 மரக்கன்று நடப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 சென்ட் முதல் 40 சென்ட் அளவில் உள்ள அரசு நிலங்களில் அன்னூர் பகுதியில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரக்கன்று வளர்க்க தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கப்பட்டது.விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயராணி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளவரசு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×