search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwar Thirumanjanam"

    திருப்பதி கோவிலில் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அதையொட்டி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதையடுத்து 11 மணியில் இருந்து 12 மணிவரை நெய்வேத்தியம் நடக்கிறது.

    12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் அன்று நடக்கயிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் 6 மணிநேர தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நிலையத்திலிருந்து வெளியே உள்ள மகாதுவாரம் வரைக்கும் இந்த பணி நடைபெறும்.

    அன்று காலை 6.30 மணிக்கு நடக்கும் அஷ்டதல பாதபத்மாராதன சேவையும், வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படும். இதையடுத்து கோவில் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதனால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு நண்பகல் 12 மணிக்கு நைவேத்தியம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 1 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பபடுகின்றனர்.

    இந்த தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி கோவில் சுத்தப்படுத்தும் பணி முடிந்ததை அடுத்து 12 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டனர்.
    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி வரும் ஜூலை 17-ந்தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது.

    அதனால் அதற்கு முன்வரும் செவ்வாய்க் கிழமையான இன்று காலை கோவில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர். 12 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ×