என் மலர்

  நீங்கள் தேடியது "akash ambani engagement"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழா தொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். #AkashAmbaniEngagement #ShahrukhKhan #AliaBhat
  மும்பை:

  இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவும் இரட்டையர்கள். மூன்றாவது ஆனந்த் அம்பானி.

  ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அம்பானி குடும்பம் பிரமாண்டமாக செய்து வருகிறது.

  இவர்களது திருமண அழைப்பிதழ் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்நிலையில், இன்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

  மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  #AkashAmbaniEngagement #ShahrukhKhan #AliaBhat
  ×