search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK General Secretary Election"

    • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வமும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு விசாரணையுடன் சேர்த்து, நாளை மறுநாள் இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அறித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார்.

    இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு விசாரணையுடன் சேர்த்து, நாளை மறுநாள் இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அறித்துள்ளார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
    • இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளில் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் முடிவில் மொத்தம் 222 பேரிடம் இருந்து மனுத்தாக்கல் பெறப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து 221 பேர் எடப்பாடி பழனிசாமி பேரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ×