search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Celebration"

    • சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    • பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    சின்னமனூர்:

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆர். அணி தேனி மாவட்ட இணை செயலாளர்பிச்சைக்கனி முன்னிலையில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    இதில் சின்னமனூர்நகர் அவைத்தலைவர் இளநீர்ராமர், தேனி மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல்பரிவு பொறுப்பாளர்ஜெகன்ராஜ் மற்றும் சின்னமனூர் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை என்ற தீர்ப்பு எதிரொலியாக நடந்தது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வெளியிட்டது தொடர்ந்து ராணிப்பேட்டை முத்துகடை பஸ் நிறுத்தத்தில் நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதேபோல் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மேளதாளம் முழுக்க பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷாபூதின், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் பூங்காவனம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனுசாமி, நகர அவைதலைவர்கள் மணி, குமரன் வாலாஜா ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, நகர மன்ற உறுப்பினர்கள் முரளி, சுரேஷ், ஜோதி சேதுராமன், ராணிப்பேட்டை நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது உமர் பாரூக் உள்பட மாவட்ட நகர ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் காளிராஜ், மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும். ெபாதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் காளிராஜ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பிஜிபி ராமநாதன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், பேரவை செயலாளர் சவுந்தர், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தென்காசி வடக்கு மாவட்டம், மானூர் வடக்கு ஒன்றியம் வன்னிக்கோனேந்தலில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில் மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி எஜமான் செந்தில்குமார், அந்தோனி டேனியல், தெற்கு அச்சம் பட்டி கிளை செயலாளர் கார்த்திக், செல்லப்பாண்டியன், கிருஷ்ணசாமி, பால்ராஜ் மற்றும் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×