search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zeion"

    சீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran
    ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.ஆர்.அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள படம் `பொது நலன் கருதி'.

    கருணாகரன், சந்தோஷ் பிரதாப், அனு சித்தாரா, சுபிக்‌ஷா, லீசா, அருண்ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்பிரமணியபுரம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஹரிகணேஷ், படத்தொகுப்பு - கிரேசன், கலை இயக்குநர் - கோபிஆனந்த், சண்டைப்பயிற்சி - ஓம்பிரகாஷ், தயாரிப்பு - ஏ.வி.ஆர். புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளர் - வி.ஆர்.அன்புவேல்ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சீயோன்.



    படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

    தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருப்பதாக கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #PodhuNalanKaruthi #Karunakaran #SanthoshPrathap

    பொது நலன் கருதி டிரைலர்:

    பொது நலன் கருதி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்கும் வரை தமிழ் சினிமாவை இழுத்து மூடும்படி ஆவேசமாக பேசினார். #PodhuNalanKaruthi #VasanthaBalan
    தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகி இருக்கிறது.

    5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நுலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



    இந்த விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது

    சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார். #PodhuNalanKaruthi #VasanthaBalan

    வசந்த பாலன் பேசிய வீடியோவை பார்க்க:

    ×