search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Service Canceled"

    • ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    திருப்பூர்:

    கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி சொரணூர்-கோவை ரெயில் நாளை காலை 11.10 மணிக்கு கோவைக்கு வரும். இந்த ரெயில் போத்தனூர்-கோவை வரை நாளை இயங்காது. மதுரை-கோவை ரெயில் நாளை போத்தனூர்-கோவை வரை இயங்காது. கோவைக்கு மதியம் 12.15 மணிக்கு சேரும். கண்ணூர்-கோவை ரெயில் போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

    கோவை-கண்ணூர் ரெயில் போத்தனூரில் இருந்து கண்ணூருக்கு ரெயில் இயக்கப்படும். போத்தனூரில் மதியம் 2.34 மணிக்கு இயக்கப்படும். கோவை-மதுரை ரெயில் போத்தனூரில் மதியம் 2.52 மணிக்கு புறப்படும். போத்தனூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். கோவை-சொரணூர் ரெயில் மாலை 4.41 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு சொரணூர் சென்றடையும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்-கோவை இடையே கடந்த மாதம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்பாத்-கோவை வாராந்திர ரெயில் நாளை 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தன்பாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேரும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 1.35 மணிக்கும் செல்லும்.

    கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் புதன்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்று சேரும். இந்த ரெயில் 8-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. ஈரோட்டுக்கு புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும், சேலத்–துக்கு 3.30 மணிக்கும் செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது.

    இதனால் கேரளாவுக்கு கோவை வழியாக செல்லும் ரெயில்களின் சேவை கடந்த 4 நாட்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சில ரெயில்கள் ஈரோடு, மதுரை, நெல்லை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

    எனவே சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் ரெயில் சேவை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரம் வருமாறு

    கண்ணூர்- ஆலப்புலா எக்ஸ்பிரஸ், கண்ணூர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- கண்ணூர் எக்ஸ்பிரஸ், மங்களூர்- நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சிவேலி-யஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ்,

    எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×