search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden fire accident"

    • திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது.
    • தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் திருச்செங்கோடு மலைக்கு விரைந்து பார்த்தபோது அந்த பகுதியில் தீ பிடித்து எர்நிதது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததை அறிந்து துரிதமாக செயல்பட்ட கோவில் நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கோடைக்காலத்தில் குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை பக்தர்கள் பொதுமக்கள் மலைப்பகுதி யில் பற்ற வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட

    னர்.

    • விக்ரமன் மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
    • இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போடப்பட்டது.

    திடீர் தீ விபத்து

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது. இதனால் பந்தல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    உடனடியாக வீட்டி லிருந்த மணமகன் மற்றும் மணமகள், உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருமண பந்தல் எரிந்து நாசம்

    இது குறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் திருமண பந்தல் தீயில் எரிந்து நாசமானது.

    இது தொடர்பாக அப்பகுதி நரிக்குறவர் காலனி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மின் வயர்கள் பொருத்தப்படவில்லை. எனவே இன்று காலை மின் விபத்து ஏற்பட்டு பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

    எனவே உடனே எங்கள் பகுதியில் பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்கள் பொருத்த வேண்டும் எனக் கூறினர்.

    • பழனி அருகே காகித ஆலையில் பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • இதில் பல கோடி மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாயின

    பழனி:

    பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் தனியார் காகித ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் பழைய பேப்பர்கள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் நேற்று பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. அடுத்தடுத்து மற்ற பேப்பர் வைத்திருந்த பகுதிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து உடனடியாக ஆலய நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அங்கு இருந்த பல டன் பழைய பேப்பர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் கூறுகையில், எரிந்துபோன பேப்பரின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர்.

    ×