search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Dakshinamurthy Navaratna Malika Stothram"

    இத்துதியை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியின் படத்தின் முன் தம்பதி சமேதராய் அமர்ந்து கூறி வர குருவருளால் குடும்ப வளமும், தாம்பத்திய ஒற்றுமையும் கிட்டும்.
    வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதாமன்யோன்யமா லிங்கிதாம்
    ஸ்யாமாமுத்பலதாரிணீம் ஸஸிநிபாஞ்சாலோகயந்தம் ஸிவம்
    ஆஸ்லிஷ்டேன கரேண புஸ்தகமதோ கும்பம்ஸுதாபூரிதம்
    முத்ராம் ஞானமயீம் ததானமபரை: முக்தாக்ஷமாலாம் பஜே

    ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்:

    தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே! தங்களுக்கு நமஸ்காரம்.

    ×