search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shakeela"

    • சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார்.
    • ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

    கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வரும் ஷகீலா அவரது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீத்தல், ஷகீலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார்.

    இதுதொடர்பாக சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து ஷீத்தலின் தாயார் சசி, அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.

    அப்போது சமாதானம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சவுந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    இதுபற்றி சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஷீத்தல், அவரது தாயார் சசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. #ShakeelaFilm #Shakeela
    தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

    திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

    ‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாக படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.



    சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் வர உள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. #Shakeela 
    பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் வழியில் நடிகை ஷகிலா பின் தொடர்கிறார். #SunnyLeone #Shakeela
    தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

    திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

    ‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாக படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.



    சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் வரஉள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமான சன்னி லியோன் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்கிறார். அதேபோல் ‌ஷகிலாவும் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்க இருக்கிறார்.
    ×