ஷகீலா மீது வளர்ப்பு மகள் தாக்குதல்: போலீசில் புகார்

சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
ஷகீலா மீது வளர்ப்பு மகள் தாக்குதல்: போலீசில் புகார்
Published on

தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வரும் ஷகீலா அவரது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீத்தல், ஷகீலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார்.

இதுதொடர்பாக சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை ஷகீலா வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து ஷீத்தலின் தாயார் சசி, அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.

அப்போது சமாதானம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சவுந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

இதுபற்றி சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஷீத்தல், அவரது தாயார் சசி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com