search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roopa IPS"

    • கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானது.
    • அவர்கள் இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்தது அம்மாநில அரசு.

    பெங்களூரு:

    கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்துரி, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா ஐ.பி.எஸ். வெளியிட்டார். சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலருக்கு ரோகிணி சிந்துரி அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக ரூபா குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மனநோயாளி என விமர்சித்தார் ரோகிணி சிந்துரி.

    இந்நிலையில், இரு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானதைத் தொடர்ந்து பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்ட ரோகிணி சிந்துரி ஐ.ஏ.எஸ். மற்றும் ரூபா ஐ.பி.எஸ். ஆகிய இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.

    அதன் பிறகு அவர் சிறைத்துறையில் இருந்து வேறு துறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் தற்போது ரெயில்வேத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார்.

    தற்போது நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுபற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. இது அனைத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் தெரியும். நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் இந்த கருத்தை கூறவில்லை.

    உண்மை நிலையை கூறுகிறேன். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இது எனது கருத்து. இதில் அரசியலுக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ×