search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prakash Kumar MLA"

    • அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.
    • கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சப்தகிரி கார்டன் பகுதிக்கு பல வருடங்களாக புதைவட கேபிள் இல்லாமல் இருந்தது.

    இதனால் மின்சார சப்ளையில் அவ்வப்போது பாதிப்பு இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாரை சந்தித்து முறையிட்டனர்.

    இதையடுத்து இப்பகுதியில் புதைவட கேபிள் அமைப்பதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணியும் வீட்டு இணைப்புக்கான கேபிள் அமைக்கும் பணியும் மேற்கொள்வ தற்கான பூமி பூஜையை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட கேபிள் பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், கேபிள் பிரிவு உதவி பொறியாளர் முருகசாமி, இளநிலை பொறியாளர் குமார், கேபிள் பிரிவு இளநிலை பொறியாளர் லோகநாயகி, பிகோத்தே உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    • தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் பகுதியில் புதியதாக அமைந்துள்ள சப்தகிரி கார்டன் மெயின் ரோடு மற்றும் உட்புற சாலைகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

    இதேபோல் முத்தியால்பேட்டை லூயி கண்ணையா நகர் தோட்டம் பகுதிக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணிக்கும் மொத்தம் ரூ.21.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கு வதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    2 பணிகளையும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார் வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.

    இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்து புதியதாக மேற்கூரை அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ வின் முயற்சியால் மேற்கூரை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

    ரூ.13.78 லட்சம் மதிப்பீட்டில் நடக்கவுள்ள இப்பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராம ரெட்டி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

    • கவர்னரிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. மனு
    • இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனோ பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டு தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் மருத்துவ செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும்.

    தற்பொழுது புதுச்சேரி அரசில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த இடத்தில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இதுகுறித்து உயிர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி பெருமாள் கோவில் வீதி, டாக்டர் அம்பேத்கர் நகரில்  வரை மின்சார விநியோகம் மின்கம்பங்கள் மூலம் கொடுக் கப்பட்டு வந்தது.

    அந்தப் பகுதியில் மின்சார கம்பிகள் மிக தாழ்வாக செல்வதால் பொது மக்களுக்கு எந்த நேரமும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., அப் பகுதிக்கு புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.

    தற்பொழுது டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள பிரதான வீதி மற்றும் குறுக்கு வீதிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் புதைவடகேபிள்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன், செயற்பொறி யாளர் கேபிள் பிரிவு செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் திலகராஜ், முருகசாமி, இளநிலை பொறியாளர்கள் குமார், லோகநாயகி பிகோத்தே மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
    • ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி முத்தைய முதலியார் வீதியில் குடிநீர் குழாய்கள் மிகவும் மோசமாக இருந்து வந்தது.

    இதனை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வைத்தகோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கையின் பேரில் ரூ.39 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார உட்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எனது தொகுதியில் இரண்டு மீனவ கிராமங்கள் உள்ளன. சோலை நகர் வடக்கு, சோலை நகர் தெற்கு இந்த பகுதிக்கு கடல் அரிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்ற உடனடியாக கடற்கரையில் கற்களை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோலை நகர் பகுதியில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தூண்டில் முள் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஒரு யோகா பயிற்சி மையம் அமைக்க மேற்கூரை அமைத்து தர வேண்டும். மேலும் காலியாக உள்ள இடத்தில் அவசர சிகிச்சைக்காக தேவையான படுக்கை வசதி ஏற்படுத்திக் கொள்ள கட்டிடம் கட்டித்தர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு திட்ட மதிப்பீடு ஏதேனும் பொதுப்பணி மேற்கொண்டதாக தெரியவில்லை.

    முத்தியால்பேட்டை தொகுதியில் பழமை வாய்ந்த தென்கலை சீனிவாச பெருமாள் திருக்கோயில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த திருக்கோவிலுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அலங்கார விளக்குகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் திருமண உதவித்தொகை ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அதனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலை பண்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் இசைக்கலைஞர்களுக்கான உதவியை காலத்தோடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.
    • மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கிறார்களா?

    புதுச்சேரி:

    புதுவை சட்ட சபையில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. பேசிய தாவது:-

    புதுவை நகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.

    வாடகை விடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? அதனை இந்த வாடகை விடும் நிறுவனம் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கின்றனவா? அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பொதுவாக வாடகைக்கு விடப்படும் வாகனங்கள் அவை வாடகை வண்டி என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள மஞ்சள் நிற நம்பர் பிளேட் மிக அவசியம்.

    தற்போது எந்த வாடகை வண்டியும் இந்த விதியை கடைப்பிடிப்பது இல்லை. மேலும் வாடகை விடப்படும் வாகனத்துடன் பாதுகாப்பு தலை கவசம் அந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதா?

    மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கி றார்களா? அல்லது இந்த வாகனங்களை கண்காணிக்க அவர்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளதா? அவர்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதா? இதனையும் போக்குவரத்து அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் தற்பொழுது எத்தனை நிறுவனங்கள் இந்த வாடகை விடும் தொழிலுக்காக போக்கு வரத்து துறை யில் விண்ணப்பி த்துள்ளன என்பதையும் இந்த மாமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நகராட்சி மூன்றும் இணைந்து வழிமுறைகளை உடனடியாக வகுத்து இந்த வாடகை விடும் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

    மேலும் நேரு வீதி மற்றும் மிஷன் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவை அனைத்திற்கும் போக்கு வரத்து துறை அமைச்சர் தகுந்த தீர்வை இந்த மாமன்றத்தில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
    • புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்தை, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நேரில் சென்று சந்தித்து தொகுதியில் மின்துறை சம்பந்தமான வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதர், செயற்பொறியாளர் கனியமுதன், புதைவட பிரிவு செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதியில் புதியதாக உருவாகியுள்ள தனலட்சுமி கார்டன், சப்தகிரி கார்டன், அம்பேத்கர் நகர், அரவிந்தர் கார்டன், ஸ்டாலின் நகர், பட்டினத்தார் தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக புதைவட மின் கேபிள் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் படி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கேட்டுகொண்டார். அதற்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜை க்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் பிரகா ஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பா ரதி வீதி முத்தா லம்மன் கோவில், பெல்கிஸ் வீதி முத்தா லம்மன் கோவில், பெரியபாளையத்தம்மன் கோவில், காட்டா மணிகுப்பம் மாரியம்மன் கோவில், பெருமாள் பேட்டை வீதி பெரியபாளை யத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    • முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏனாம் சட்டமன்ற உறுப்பினரிடம் பெரும் எதிர் பார்ப்பை பார்த்து தான் அந்த தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை

    எப்படி எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விடுத்து அரசியல் முதிர்ச்சி பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது.

    தற்போது தான் பேசியதை தவறாக புரிந்து செய்தி வெளியிட்டுள்ளதாக கூறும் ஏனாம் எம். எல்.ஏ. சிந்தித்து செயல்பட வேண்டும். வாக்களித்த மக்களுக்கு எப்படி எல்லாம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற சிந்தித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

    சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தேர்வானாலும் தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களிடம் தனது ெதாகுதிக்கு வேண்டிய திட்டங்களை நிறை வேற்றிக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதை தவிர்த்து முதல்- அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசுவது தவறானதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை குடிசை மாற்று வாரியம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முத்தியால் பேட்டை தொகுதியை சேர்ந்த 5

    பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்துக்கான மானிய தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு மானியத்துக்கான ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் சத்தியவாணி, வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×