search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூடுதலாக தூண்டில் முள்வளைவு அமைக்க வேண்டும்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    கூடுதலாக தூண்டில் முள்வளைவு அமைக்க வேண்டும்-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

    • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எனது தொகுதியில் இரண்டு மீனவ கிராமங்கள் உள்ளன. சோலை நகர் வடக்கு, சோலை நகர் தெற்கு இந்த பகுதிக்கு கடல் அரிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்ற உடனடியாக கடற்கரையில் கற்களை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோலை நகர் பகுதியில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தூண்டில் முள் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வருடம்தோறும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஒரு யோகா பயிற்சி மையம் அமைக்க மேற்கூரை அமைத்து தர வேண்டும். மேலும் காலியாக உள்ள இடத்தில் அவசர சிகிச்சைக்காக தேவையான படுக்கை வசதி ஏற்படுத்திக் கொள்ள கட்டிடம் கட்டித்தர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல்லூரி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்ட ஜல்ஜீவன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு திட்ட மதிப்பீடு ஏதேனும் பொதுப்பணி மேற்கொண்டதாக தெரியவில்லை.

    முத்தியால்பேட்டை தொகுதியில் பழமை வாய்ந்த தென்கலை சீனிவாச பெருமாள் திருக்கோயில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த திருக்கோவிலுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அலங்கார விளக்குகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் கடந்த காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் திருமண உதவித்தொகை ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அதனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலை பண்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் இசைக்கலைஞர்களுக்கான உதவியை காலத்தோடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×