search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OdishaTrainAccident"

    • 17 பெட்டிகள் தடம் புரண்டதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்று தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவித்துள்ளார்.

    மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவாச் திட்டம் ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
    • விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி, ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு விரைகிறார். பின்னர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
    • விபத்து நடந்தபோது இரண்டு ரெயில்களும் அதிவேகத்தில் சென்றதால் பாதிப்பு அதிகம் என தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.

    ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.

    சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன.

    அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன.

    மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

    ×