search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nepal cricket Team"

    • நேபாள அணி குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
    • இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

    காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. மேலும் அந்த அணி குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

    ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதலே அது இந்தியாவில் கடும் விவாதத்துக்கு உள்ளானது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

    ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா கடந்த ஆண்டே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி, ஆசிய தொடரில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகளை உள்நாட்டிலும், இந்திய அணி அதன் போட்டிகளை பொதுவான ஒரு இடத்திலும் விளையாடும் என்று முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

    ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை, செப்டம்பர் 2 முதல் 17 வரை நடைபெறும். எனினும், போட்டி நடைபெறும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படாததால், போட்டிகளின் சரியான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் இடம்பிடித்துள்ளனர். #ICCTestRankings
    ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் வெற்றித் தோல்வியை கணக்கிட்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசையை வெளியிடும்.

    ஏற்கனவே இந்த தரவரிசையில் 12 அணிகள் இடம்பிடித்திருந்தன. தற்போது அது விரிவாக்கம் செய்யப்பட்டு 12-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்ற 13 அணிகளில் வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தை பெற்றது.



    ஐசிசியின் கிரிக்கெட் உலகக் கோப்பை குவாலிபையர் 2018 தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஸ்காட்காந்து, நேபாளம், யுஏஇ அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

    இன்று முதல் இந்த நான்கு அணிகளும் ஒருநாள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. ஸ்காட்லாந்து 28 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது. 18 புள்ளிகளுடன் யுஏஇ 14-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 15-வது இடத்திலும் உள்ளது.
    ×