search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netherland Team"

    • 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக தமிழக வீரர் ஒருவர் தேர்வாகி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 29). 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.

    இதற்கிடையே நெதர்லாந்து அணிக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தார். இடது கை வேகப்பந்து மற்றும் சைனாமேன் பந்து வீச்சாளராக அவர் தனது பந்து வீசும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் அனுப்பி வைத்தார். இந்தியாவில் இந்து சுமார் 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    இதுகுறித்து லோகேஷ் குமார் கூறும்போது, இது எனது வாழ்க்கையின் விலை மதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடவில்லை. நான்கு ஆண்டுகளாக 5-வது பிரிவில் விளையாடினேன். நடப்பு சீசனில் 4-வது பிரிவில் பதிவு செய்துள்ளேன்.

    நெதர்லாந்து அணியால் ஒரு வலைப்பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன். நெதர்லாந்து அணி வீரர்கள் என்னை உற்சாகமுடன் வரவேற்றனர். இது உங்கள் அணி தாராளமாக உணருங்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்து அதற்கு முயற்சி செய்ய முடிவு எடுத்தேன். அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லாததால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகாவின் ஆலூரில் நடந்து வரும் நெதர்லாந்து அணியின் பயிற்சி முகாமில் லோகேஷ் குமார் இணைந்து உள்ளார்.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் இடம்பிடித்துள்ளனர். #ICCTestRankings
    ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் வெற்றித் தோல்வியை கணக்கிட்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசையை வெளியிடும்.

    ஏற்கனவே இந்த தரவரிசையில் 12 அணிகள் இடம்பிடித்திருந்தன. தற்போது அது விரிவாக்கம் செய்யப்பட்டு 12-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்ற 13 அணிகளில் வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தை பெற்றது.



    ஐசிசியின் கிரிக்கெட் உலகக் கோப்பை குவாலிபையர் 2018 தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஸ்காட்காந்து, நேபாளம், யுஏஇ அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

    இன்று முதல் இந்த நான்கு அணிகளும் ஒருநாள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. ஸ்காட்லாந்து 28 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது. 18 புள்ளிகளுடன் யுஏஇ 14-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 15-வது இடத்திலும் உள்ளது.
    ×