search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor election"

    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
    • துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று காலையில் நடந்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம்ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், சிரோன்மணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.

    மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார்.

    துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார். 

    இந்நிலையில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக மோதியது. தலைமை அதிகாரி அனில்மசிஹ், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு பணியை தொடங்கினார்.

    சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் அலுவல் உறுப்பினராக வாக்குரிமை பெற்ற சண்டிகர் எம்.பி கிரோன்கெர் முதலில் வாக்களித்தார். அவர் காலை 11.15 மணிக்கு வாக்களித்தார்.

    இந்த மேயர் தேர்தலில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ்சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகள் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    இதில், மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரை அவர் எளிதில் தோற்கடித்தார்.

    அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார். 

    வாக்கெடுப்பு பணியின்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கும் முன், மாநகராட்சி இணை ஆணையர், பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    மேயர் தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மேயர் தேர்தல் முதலில் ஜனவரி 18- ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 8 ஆண்டுகளாக மேயர் பதவியை வகித்து வரும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

    மராட்டியத்தில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஆட்டோ டிரைவர் வெற்றி பெற்றார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி சார்பில் ராகுல் ஜாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வினோத் நாதேவும் போட்டியிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 128 கவுன்சிலர்களில் 120 பேர் மட்டுமே வாக்களித்தனர். 7 பேர் நடுநிலை வகித்தனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வேட்பாளர் ராகுல் ஜாதவ் அமோக வெற்றி பெற்றார். அவர் 80 வாக்குகள் பெற்று இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வினோத் நாதேவுக்கு 33 வாக்குகளே கிடைத்தது.

    பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சியின் 25-வது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் ஜாதவ் ஆட்டோ டிரைவராக இருந்தவர். மேயர் ஆன பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளியான எனக்கு அவர்களின் பிரச்சினைகள் தெரியும். எனவே அவர்களின் நலனுக்காக பாடுபடுவேன். நகர வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பேன்” என்றார்.

    துணைமேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் சச்சின் சிஞ்ச்வாட் வென்றார். இவருக்கு 79 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தாப்கீர் காட் 32 ஓட்டுகள் பெற்றார்.
    ×