search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayiladuthurai murder"

    • முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது31). கூலி தொழிலாளியான இவர் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்தவர்.

    கண்ணனுக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இலை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்த சிலர் கலைஞர் காலனி பகுதி வந்தவுடன், அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து சரமாரியாக கண்ணனை வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றினர். இதில் 12 பேர் கும்பல் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் 12 பேர் அடங்கிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மேலபட்டமங்கலம் திடல் தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவருடைய மகன் சதீஷ்(வயது36). பொக்லின். எந்திர டிரைவர். சதீசின் உறவினர் வினோத். இவருக்கும் வழுவூர் நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது வினோத்துக்கு ஆதரவாக சதீஷ் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சதீசுக்கும் மகேஸ்வரியின் உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தீபாவளியன்று மாலை 4.30 மணியளவில் சீனிவாசபுரம் கடைவீதியில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் உறவினர்களான இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சினிமா பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர். அப்போது சதீசுக்கும் இளவரசன் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த இளவரசனின் அண்ணன் மாதவன் மற்றும் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மாதவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று பிரபு, இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சதீசை பிடித்து தாக்கினர். அப்போது மாதவன் கத்தியால் சதீசின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சதீசின் உறவினர்கள் கொலை நடந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சதீசின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தீபாவளியன்று

    இந்தநிலையில் மயிலாடுதுறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சதீஷ் கொலை தொடர்பாக நெய்க்குப்பை வடக்கு தெருவை சேர்ந்த மனோகர் மகன் மாதவன் (33), இவரது தம்பி இளவரசன் (27), நெய்க்குப்பை தோப்புத்தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் பிரபு (38), அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரகு (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் தினேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறை அருகே சைக்கிள் தகராறில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த ஊர்க்குடியை சேர்ந்த ரெங்கையன் மகன் ஜெகதீஸ் (வயது 30). விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று மஞ்ச வாய்க்காலில் உள்ள பவானி என்பவர் வீட்டில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் அவர் சைக்கிளை எடுக்க வந்த போது அவரது சைக்கிள் செயின் துண்டாகி இருந்தது. எனவே சைக்கிளை தள்ளிகொண்டு சென்றார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் இளையராஜா என்பவர் “சைக்கிளை ஏன் தள்ளி கொண்டு செல்கிறீர்கள்” என்று கேட்டார். அப்போது சைக்கிள் செயின் அறுந்து விட்டதாக ஜெகதீஸ் கூறினார். அவரிடம் ஊர்க்குடியை சேர்ந்த “சந்திரசேகரன் மகன் முரளி உங்கள் சைக்கிளை எடுத்து ஓட்டினார். இதனால் தான் சைக்கிள் செயின் அறுந்துள்ளது” என்று இளையராஜா கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஜெகதீஸ் முரளியிடம் “எனது சைக்கிளை ஏன் எடுத்து ஓட்டினாய்” என்று கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ் ஸ்குருடிரைவரை எடுத்து முரளி நெஞ்சில் பலமாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி பலியான முரளியின் அண்ணன் மோகன்தாஸ் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.

    சைக்கிளை எடுத்து ஊர்க்குடி வாலிபரை கொலை செய்த சம்பவம் ஊர்க்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×