search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maria sharapova"

    • கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து மரியா ஷரபோவா ஓய்வு பெற்றார்.
    • 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    தற்போது 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    அதில் தனது கணவர் கில்கெஸ் மற்றும் பிறந்து 2 வாரங்களான குழந்தை தியோடர் ஆகியோரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் பர்மிங்காம் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். #sharapova
    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையும், 2004-ம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியனும் ஆன மரியா ஷரபோவா பர்மிங்காம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறிய ஷரபோவா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.



    ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக 2016-ல் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ‘‘எனக்கு பர்மிங்காமில் சிறந்த நினைவுகள் உள்ளன. இந்த வருடம் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகினார். #FrenchOpen #SerenaWilliams
    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றார். 36 வயது நிரம்பிய செரீனா, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், இன்று 4–வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக செரீனா போட்டியில் இருந்து விலகினார்.

    சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தின்போதே செரீனாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரட்டையர் பிரிவில் ஓரளவு சமாளித்து ஆடினார். ஆனால், இன்று அவரால் தொடர்ந்து சர்வீஸ் போட முடியாத நிலை ஏற்பட்டதால் பாதியில் விலகி உள்ளார்.

    ஷரபோவாவுடன் போட்டியிட இருந்த கடைசி நேரத்தில் அவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

    இதுபற்றி செரீனா கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக என்னுடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இப்போதைய நிலையில் என்னால் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்று ஒருபோதும் காயம் ஏற்பட்டது கிடையாது. இதுபோன்ற வேதனையையும் அனுபவித்தது கிடையாது” என்றார்.

    செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  காலிறுதியில் முகுருசா அல்லது லேசியாவுடன் மோத உள்ளார் ஷரபோவா. #FrenchOpen #SerenaWilliams
    பிரான்ஸ் வீராங்கனை கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி மாட்ரிட் காலிறுதிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா. #madridOpen
    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டாக கருதப்படும் ஓபன்களில ஒன்றான் மாட்ரி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா பிரான்சின் கிரிஸ்டினா மிலாடெனோவிக்கை எதிர்கொண்டார். இதில் மரியா ஷரபோவா 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இவருடன் கிவிடோவா, சுவாரஸ் நவோரா, கார்சியா, பிளிஸ்கோவா, பெர்ட்டென்ஸ், ஹாலெப், கசட்கினா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.



    காலிறுதியில் ஷரபோவா பெர்ட்டென்ஸை எதிர்கொள்கிறார். ஷரபோவா தடைக்காலம் முடிந்து மீண்டும் களமிறங்கும்போது விமர்சனம் செய்தவர் கிரிஸ்டினா மிலாடெனோவிக். ஷரபோவாவின் முதல் தொடரான ஸ்டட்கார்ட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஷரபோவாவை தோற்கடித்திருந்தார். தற்போது அதற்கு பழிதீர்த்துள்ளார்.
    ×