search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna Jayanti Celebration"

    • பள்ளி மாணவர்களுக்கு ஆன்மீக வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பின்னர் கிருஷ்ண பிரசாத அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் பா.ஜ.க சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு ஆன்மீக வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும், கிருஷ்ண பிரசாத அன்னதானமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவுசெயலாளர் மாரிதுரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் ரேவதி கண்ணன், மண்டல் பொதுசெயலாளர் வெங்கடேஷ், மாவட்ட தொழிலாளர்கள் நலவாரியம் தலைவர் சிவசந்திரகுமார், மாவட்ட விவசாய அணிசெயலாளர் கணேசமூர்த்தி, ஓன்றியவிவசாய அணிதலைவர் திருதணிநாதன், ஓன்றிய துணைத்தலைவர் கண்மணி, ஓன்றிய கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், ஓன்றிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் திரவியம், ஓன்றிய விவசாயஅணி பொதுசெயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் செந்தூர்செல்வன், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன் செய்திருந்தார்.

    • மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும் ராதைகளாகவும் வேடமிட்டு அசத்தினர்.
    • கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும்ராதைகளாகவும் வேடமிட்டு கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

    ஒவ்வொரு மாணவரும் கிருஷ்ணர்களாகவும், மாணவிகள் ராதையாகவும் வேடமணிந்து இருந்தது மிகவும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணிசதிஷ், பொருளாளர் சுருதி வேலுசாமி, பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

    ×