என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iron Rich Foods"
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
- ஜீரண உறுப்புகள் சரியாக செயல்பட இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது.
இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் முக்கியம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது ஏற்படுகிறது. ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என அறிவோம்...
இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது:
கீரைகள்:
உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.
நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்:
முந்திரி பருப்பு, ஆப்ரிகாட், பாதாம் பருப்பு, வாதுமை, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச் சத்தை அதிகரிக்கலாம். பாசிப்பயிறு, முழு கருப்பு உளுந்து போன்ற பயிறு வகைகளைச் சாப்பிடுவது இன்னும் அதிக அளவிலான இரும்புச்சத்து கிடைக்க வழி வகைசெய்யும்.
விதைகள்:
பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இதுவும் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், ஓட்ஸ் நல்ல ஆதாரங்களாகும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போதுமான அளவு இரும்புச்சத்தை வழங்கும். கூடுதலாக, பாதாம், திராட்சை மற்றும் முந்திரி போன்ற சில பழங்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம்.
மீன்:
மீன் வகைகளில் ஷெல்பிஷ், நண்டு, டூனா மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களில் இரும்புச் சத்து காணப்படுகிறது. சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, கொட்டைகள், விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தையும், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் தருகிறது. டார்க் சாக்லேட்டில் 55 சதவிகிதம் கோக்கோ மற்றும் நிறைய இரும்புச்சத்து காணப்படுகிறது.
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தாவர மூலங்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடைமிளகு மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சில பொருட்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த பொருட்களில் காபி, தேநீர் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் அடங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்