search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Centers"

    • ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.
    • பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.

    நாமக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மருத்துவத் துறையின் மூலம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 500 நகர்ப்பற நல வாழ்வு மையங்களை, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஒரே நேரத்தில் திறந்து வைத்தார்.

    இந்த நல வாழ்வு மையங்களில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு ஆய்வாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்பட்டு, பொதுமக்களுக்கு மிக அருகிலேயே தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படும்.

    இந்த திட்டத்தின்கீழ், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பட்டி, போதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதைத் தொடர்ந்து, நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, தெற்கு நகர தி.மு.க செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கமிஷனர் ஆணையாளர் சென்ன கிருஷ்ணன், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    ×