search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hair massage"

    • வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது.
    • ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறை

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர சில குறிப்புகள் பின்வருமாறு:-

    1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

     2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி 'ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்' உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி

    3. ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டு. பின்னர் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்டை தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

     4. வெண்ணையை வரண்ட முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம், பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இப்படி செய்தால் பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

     5. வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

    6. ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வறண்ட உங்கள் கூந்தலில் இதனை தேய்த்து ஊறவைத்து பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு அலசலாம். இதனை செய்து வந்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

    7. வறண்ட கூந்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

    8. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் 'டால்' அடிப்பது உறுதி.

    • ஆண், பெண் இருபலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.
    • தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது.

    பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம். இந்த பொடுகு பிரச்சனை என்பது எளிதில் தீர்க்க முடியாது. மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை விடாமல் சில நாட்கள் பயன்படுத்தினால் மட்டுமே சரியாகும்.

    தேவையான பொருள்கள்:

    மருதாணி இலை – 1 கப்

    எலுமிச்சை பழம் – 1

    தயிர் – 2 ஸ்பூன்

    முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நன்றாகப் பிழிந்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுத்தமான தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருதாணி இலையை அரைத்து நான்கு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.

    இந்த பேக்கை முதலில் தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், அமிலம் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்காத ஷாம்பு அல்லது சீயக்காய் மற்றும் அரப்பு போன்றவை கூட பயன்படுத்தலாம்.

    இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தினால் விரைவில் பொடுகுகள் முழுவதுமாக போகும் எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது.

    எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் அமிலம் உள்ளதால் அது கிருமிநாசினியான பண்புகள் கொண்டது அது தலையில் நோய்த் தொற்றுகள் இருந்தால் குணமாக்கும். பொடுகு பிரச்சனையைச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். தலையில் பித்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரிசெய்யும்.

    தயிரை தலைமுடியில் தேய்ப்பதால் தலையில் உள்ள முடிகளில் பொலிவு இல்லாமல் மற்றும் முடி அடர்த்தி குறைவாக இருந்தாலும் இது குணமாக்கித் தரும். தலைமுடி மிகவும் கருமையாகவும் மற்றும் பெலிவுடனும் வைத்து கொள்ளும்.

    மருதாணி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மருத்துவம் குணம் கொண்டது. இதை தலைக்குப் பயன்படுத்தினால் தலையில் உள்ள சூட்டை முழுவதுமாக நீக்கி குளிர்ச்சியாக வைத்திருக்கும். பித்தம் போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும்.

    இந்த மூன்றையும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான ஹேர் பேக் தயார் செய்து பயன்படுத்தினால் பொடுகு மற்றும் தலையில் முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

    முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    முட்டைகள்
    எக்ஸ்ட்ராவெர்ஜின் ஆலிவ் எண்ணெய்

    இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.



    இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

    அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி விடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும். இதை வாரம் ஒரு முறை போடுவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து மீண்டும் வளர தொடங்கும்.
    ×