search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hair pack"

    • சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
    • ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.

    பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

    அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

    வெங்காயம் ஹேர் பேக்

    சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ஆலிவ் ஆயில் மசாஜ்

    ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

    இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

    முட்டை ஹேர்மாஸ்க்:

    முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

    இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    • இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது.
    • நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும்.

    முடி வெள்ளையாக மாறுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வரும் இது மிகவும் சாதாரணமான ஒன்று. இது தான் இயற்கையும் கூட. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினர் பலருக்கும் நரைமுடி பிரச்சனை உள்ளது. வயதானவர்களுக்கு நரைமுடி வரும் போதே ஒருவித கலக்கம் ஏற்படும். அப்படி இருக்கையில் இளம் வயதினருக்கு இந்த நரைமுடி வந்தால் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

    இளநரை மறைவதற்கு நாம் மூசாம்பரம் என்னும் பொருளை மட்டும் நாட்டு மருந்து கடையில் வாங்க வேண்டும். இது கற்றாழை ஜெல்லில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை நாம் பயன்படுத்தாமல் தூர போட்டு விடுவோம். அந்த திரவத்தை சேகரித்து வைத்து அதில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த முசாரம். இதை வைத்து தான் இளநரையை தடுப்பதற்கான பேக்கை தயார் செய்யப் போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்

    மூசாம்பரம்

    செய்முறை:

    இந்த பேக் தயாரிக்க முதலில் கால் கப் நல்ல முற்றிய தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் இருந்து கிடைக்கும் திக்கான தேங்காய்ப் பாலை அரை டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் போதும். இப்போது 1 பவுலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி அதில் ஒரு கட்டி மூசாம்பரம் போட்டு விடுங்கள்.

    இது குறைந்தது 4 மணி நேரம் அப்படியே ஊற வேண்டும். இந்த நேரத்திற்குள்ளாக இதில் உள்ள முசாரம் தேங்காய் பாலில் நன்றாக ஊறி கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். இதை நீங்கள் தலையில் பேக்காக அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள்.

    இது 1 மணி நேரம் வரை தலையில் இருக்கட்டும். அதன் பிறகு மைல்டான ஷாம்பூவை போட்டு தலைக்கு குளித்தால் போதும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தும் போது உங்களின் இளநரை பிரச்சனை ஒரு மாதத்திற்குள்ளாகவே சரியாகி விடும்.

    மேலும் அது மட்டும் இன்றி இதைத்தொடர்ந்து பயன்படுத்தும் போது வெள்ளை முடி வருவது தடுப்பதோடு, வெள்ளை முடியும் கூட நிறம் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது.
    • ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறை

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர சில குறிப்புகள் பின்வருமாறு:-

    1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

     2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி 'ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்' உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி

    3. ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டு. பின்னர் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்டை தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

     4. வெண்ணையை வரண்ட முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம், பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இப்படி செய்தால் பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

     5. வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

    6. ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வறண்ட உங்கள் கூந்தலில் இதனை தேய்த்து ஊறவைத்து பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு அலசலாம். இதனை செய்து வந்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

    7. வறண்ட கூந்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

    8. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் 'டால்' அடிப்பது உறுதி.

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    • இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது.
    • இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக்.

    முதுமைக்கு நரை அழகுதான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இன்றோ இளம்வயதினருக்கும் முடி நரைக்கிறது. தோற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பலருக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்றைக்கு நாம் இளநரையை விரட்டும் ஆளிவ் ஹேர் பேக் பற்றி பார்க்கலாம். இது உங்கள் முடிக்கு உறுதி தந்து, முடி உதிர்வதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

     தேவையான பொருட்கள்:

    ஆளி விதை – 100 கிராம்

    கற்றாழை – 3 டீஸ்பூன்

    விட்டமின் இ கேப்ஸ்யூல் – 3

    செய்முறை:

    ஆளி விதை ஹேர் பேக் செய்வதற்கு 100 கிராம் ஆளி விதையை எடுத்து அத்துடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நாம் கொதிக்க வைத்துள்ள ஆளி விதை தண்ணீர் ஒரு ஜெல் பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதை ஒரு சல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி எடுத்துள்ள ஆளிவ் ஜெல்லுடன் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பிறகு இதோடு இ கேப்ஸ்யூல் ஆயிலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது ஆளிவ் ஹேர் பேக் ரெடி. முடியில் தேய்த்து 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து விட வேண்டும்.

    இந்த ஆளிவ் ஹேர் பேக்கில் ஒமேகா 3 என்ற ஒரு வகையான சத்து இருப்பதால், இது நம் முடிக்கு உறுதியை தந்து இளநரை வருவதையும் தடுக்கிறது. இந்த ஹேர்பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவது முடியின் வலிமையை அதிகரிக்கும்.

    • ஆண், பெண் இருபலருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பொடுகு.
    • தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது.

    பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படி சரிசெய்வது என பார்க்கலாம். இந்த பொடுகு பிரச்சனை என்பது எளிதில் தீர்க்க முடியாது. மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை விடாமல் சில நாட்கள் பயன்படுத்தினால் மட்டுமே சரியாகும்.

    தேவையான பொருள்கள்:

    மருதாணி இலை – 1 கப்

    எலுமிச்சை பழம் – 1

    தயிர் – 2 ஸ்பூன்

    முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நன்றாகப் பிழிந்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுத்தமான தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருதாணி இலையை அரைத்து நான்கு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.

    இந்த பேக்கை முதலில் தலையில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், அமிலம் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்காத ஷாம்பு அல்லது சீயக்காய் மற்றும் அரப்பு போன்றவை கூட பயன்படுத்தலாம்.

    இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தினால் விரைவில் பொடுகுகள் முழுவதுமாக போகும் எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது.

    எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் அமிலம் உள்ளதால் அது கிருமிநாசினியான பண்புகள் கொண்டது அது தலையில் நோய்த் தொற்றுகள் இருந்தால் குணமாக்கும். பொடுகு பிரச்சனையைச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். தலையில் பித்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் சரிசெய்யும்.

    தயிரை தலைமுடியில் தேய்ப்பதால் தலையில் உள்ள முடிகளில் பொலிவு இல்லாமல் மற்றும் முடி அடர்த்தி குறைவாக இருந்தாலும் இது குணமாக்கித் தரும். தலைமுடி மிகவும் கருமையாகவும் மற்றும் பெலிவுடனும் வைத்து கொள்ளும்.

    மருதாணி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மருத்துவம் குணம் கொண்டது. இதை தலைக்குப் பயன்படுத்தினால் தலையில் உள்ள சூட்டை முழுவதுமாக நீக்கி குளிர்ச்சியாக வைத்திருக்கும். பித்தம் போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும்.

    இந்த மூன்றையும் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான ஹேர் பேக் தயார் செய்து பயன்படுத்தினால் பொடுகு மற்றும் தலையில் முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.

    • முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
    • நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை.

    பொதுவாக எல்லோருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு, என்ன தான் செய்வது என்று ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அதிகமாக புலம்புகிறார்கள். அதிலும் சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

    ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும் போது கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி நாம் உபயோகப்படுத்துகின்றோம். ஆனால் இதுமாதிரி நாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாக முடி உதிர்வு பிரச்சினை அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது. அதனால் இன்று முடி பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வினை அளிக்கக்கூடிய ஒரு ஹேர் பேக் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

    தினமும் நாம் உண்ணும் உணவானது ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இல்லை என்றால் அதன் விளைவாக முதலில் முடி உதிர்வு பிரச்சினை தான் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

     தேவையான பொருட்கள்:

    தேங்காய்- 1 மூடி

    வெந்தயம்- 3 ஸ்பூன்

    முட்டை- 1

    காட்டன் துணி- சிறிதளவு

    செய்முறை:

    வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் முடிக்கு பலவிதமான பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால் 3 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலையில் 1 மூடி தேங்காயினை துருவி அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக தேங்காய் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் எடுத்துவைத்துள்ள தேங்காய் பால் இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விடுங்கள்.

    அதன்பிறகு ஒரு காட்டன் துணியில் அரைத்துள்ள பேஸ்ட்டினை சேர்த்து சுத்தமாக வடிகட்டி பிழிந்து ஒரு பவுலில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கடைசியாக பவுலில் உள்ள பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். இப்போது முடி உதிர்வு பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கக்கூடிய ஹேர் பேக் தயார்.

     இப்போது தலையில்வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை அப்ளை செய்து விட்டு பின்னர் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை அப்ளை செய்ய வேண்டும்.

    அதன்பிறகு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் சீயக்காய் கொண்டு தலை முடியினை அலசி விட வேண்டும். இந்த ஹேர் பேக்கினை அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினை என்பது இருக்காது.

    ×