search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former MP Ramadoss"

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
    • நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது நிதிக் குழுவின் பணிகள் பற்றிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விதிகளால் புதுவைக்கு தேவையான நிதியை பெற முடியாது.

    புதுவை மாநிலமாக இல்லாவிட்டாலும் 16-வது நிதிக்குழுவில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், நிதித்துறை மந்திரியை சந்தித்து இதை வலியுறுத்தியிருந்தால் 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்பட்டிருக்கும்.

    இதை செய்ய தவறியதால் புதுவை மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரை யறைக்குள் செல்ல முடியாது. இதனால் மத்திய அரசின் வரி வருவாயில் புதுவைக்கு பங்கு கிடைக்காது.

    அரசியல் சட்ட விதி எண் 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி வழங்கப்படாது. உள்ளாட்சி அமைப்பு களுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, புனரமைப்பு மானியங்கள், கல்வி மானியம் மாநில சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி எதுவும் கிடைக்காது.

    இது புதுவைக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். புதுவை பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கப் போகிறது. இதற்கு முதல்-அமைச்சரும், கவர்னரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

     புதுச்சேரி மதுச்சேரியாக, கஞ்சா சேரியாக, ஊழல் சேரியாக மாறியுள்ளது. இப்போது கொலை சேரியாகவும் மாறுகிறது. அடிக்கடி வெட்டவெளியில் கொலைகள் சாதாரணமாக நடப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதைத்தான் பெஸ்டு புதுவை என கவர்னர் பெருமையோடு சொல்கிறாரா? அமைதி பூங்காவாக இருந்த புதுவையில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் குற்றங்கள் நெஞ்சுருக்கும் நிலையில் உள்ளது. தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    இதைத்தான் எல்லா துறைகளும் வளர்ந்துள்ளது என முதல்- அமைச்சர் சுதந்திர தின உரையில் கூறுகிறாரா உருளையன் பேட்டையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என கொலை நடக்கும் முன்பே தொகுதி எம்.எல்.ஏ. நேரு காவல் துறையை எச்சரித்துள்ளார். ஆனால் காவல்துறை இதை கண்காணிக்கவில்லை. குற்றங்கள் நடக்கும் முன்பே தடுப்பதுதான் திறமையான காவல்துறை.

    அதற்கு கண்காணிப்பு பிரிவை வலுப்படுத்த வேண்டும். சமூக ஆய்வு நடத்தி நிரந்தரமான சமூக, பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தால்தான் புதுவை குற்றங்களிலிருந்து விடுபட்டு அமைதி பூமியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
    • பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிகளை புறக்கணித்து அடையாள உண்ணாவிரதம் இருந்திருப்பது வருத்தத்திற்குரியது. அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது புதுவை அரசுதான்.

    இந்தப் பல்கலைக்கழகம் புதுவையின் முதல் பல்கலைக்கழகம். இதை கண்ணும் கருத்தோடும் வளர்த்து ஒரு தரமான பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை. பல்கலைக்கழகமாக மாற்றிய பிறகும் அதை ஒரு கல்லூரியாகவே நடத்துவது முறையற்ற செயலாகும். பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.

    3 ½ ஆண்டுக்கு பிறகும் ஆட்சி மன்றக்குழுவை நியமிக்காதது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயல். ஆட்சிமன்ற குழு இல்லாமல் பல்கலைக்கழகம் ஒரு கல்லூரியாகத்தான் திகழும். எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயராது. அதனால்தான் தேசிய தரவரிசையில் கல்லூரியாக இருந்தபோது 34-வது இடத்தில் இருந்த நிறுவனம், பல்கலைக்கழகமாக மாறிய பிறகு 200-வது வரிசைக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது.

    முதல் தர பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களது போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இதை உணர்ந்து புதுவை அரசு பல்கலைக்கழகத்திற்கு ஒரு நல்ல திறமையான அனுபவம் வாய்ந்த பதிவாளரை நியமிப்பதோடு, ஆட்சிமன்றக் குழுவையும் உடனடியாக துணைவேந்தர் தலைமையில் நியமித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சரியான பாதையில் செயல்படுத்த வைக்க வேண்டியது கவர்னர், முதல்-அமைச்சரின் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
    • மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்டு 16-ம் நாள் புதுவையின் சுதந்திரத்திற்கும் இந்திய யூனிய னோடு சேர்ந்து யூனியன் பிரதேசமாக மாறியதற்கும் வித்திட்ட நாள். புதுவை மண்ணின் மைந்தர்கள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டிய ஒரு நாள். அந்த நாளை புதுவை சட்டபூர்வபரிமாற்ற நாள் விழாவாக வாக்கெடுப்பு நடந்த கீழூரில் புதுவை அரசு கொண்டாடு கிறது.

    அந்த நாளில் தேசியக் கொடி ஏற்றி தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் அங்கு நடந்தவிழாவில் கலந்து கொண்டு கொடியேற்றவில்லை.

    கீழூரின் வரலாற்று முக்கியத்துவத்தை முதல்- அமைச்சர் உணரவில்லையா? மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது கடமையிலிருந்து தவறி உள்ளார். இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய முதல்-அமைச்சர் கீழூரிலும் கொடியேற்றி புதுவைக்கும், அதன் சுதந்திரத்திற்கும் மரியாதை செய்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் கீழூருக்கு முக்கியத்துவம் அளித்து அதனை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×