search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கீழூரில் தேசியக்கொடி ஏற்றாமல் ரங்கசாமி கடமை தவறியுள்ளார்
    X

    கோப்பு படம்.

    கீழூரில் தேசியக்கொடி ஏற்றாமல் ரங்கசாமி கடமை தவறியுள்ளார்

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
    • மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்டு 16-ம் நாள் புதுவையின் சுதந்திரத்திற்கும் இந்திய யூனிய னோடு சேர்ந்து யூனியன் பிரதேசமாக மாறியதற்கும் வித்திட்ட நாள். புதுவை மண்ணின் மைந்தர்கள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டிய ஒரு நாள். அந்த நாளை புதுவை சட்டபூர்வபரிமாற்ற நாள் விழாவாக வாக்கெடுப்பு நடந்த கீழூரில் புதுவை அரசு கொண்டாடு கிறது.

    அந்த நாளில் தேசியக் கொடி ஏற்றி தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் அங்கு நடந்தவிழாவில் கலந்து கொண்டு கொடியேற்றவில்லை.

    கீழூரின் வரலாற்று முக்கியத்துவத்தை முதல்- அமைச்சர் உணரவில்லையா? மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது கடமையிலிருந்து தவறி உள்ளார். இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய முதல்-அமைச்சர் கீழூரிலும் கொடியேற்றி புதுவைக்கும், அதன் சுதந்திரத்திற்கும் மரியாதை செய்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் கீழூருக்கு முக்கியத்துவம் அளித்து அதனை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×