search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிதிக் குழுவில் சேர்க்காததால் புதுவைக்கு நிதி இழப்பு ஏற்படும்
    X

    கோப்பு படம்.

    நிதிக் குழுவில் சேர்க்காததால் புதுவைக்கு நிதி இழப்பு ஏற்படும்

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
    • நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது நிதிக் குழுவின் பணிகள் பற்றிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் நிதி பற்றிய 2 விதிமுறைகள் புதுவை பிரதேச மக்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த விதிகளால் புதுவைக்கு தேவையான நிதியை பெற முடியாது.

    புதுவை மாநிலமாக இல்லாவிட்டாலும் 16-வது நிதிக்குழுவில் சேர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், நிதித்துறை மந்திரியை சந்தித்து இதை வலியுறுத்தியிருந்தால் 16-வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்பட்டிருக்கும்.

    இதை செய்ய தவறியதால் புதுவை மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரை யறைக்குள் செல்ல முடியாது. இதனால் மத்திய அரசின் வரி வருவாயில் புதுவைக்கு பங்கு கிடைக்காது.

    அரசியல் சட்ட விதி எண் 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி வழங்கப்படாது. உள்ளாட்சி அமைப்பு களுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, புனரமைப்பு மானியங்கள், கல்வி மானியம் மாநில சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி எதுவும் கிடைக்காது.

    இது புதுவைக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். புதுவை பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கப் போகிறது. இதற்கு முதல்-அமைச்சரும், கவர்னரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×