search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvSRH"

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது.
    • டெல்லி அணி 17.2 ஓவரிலேயே ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

    இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சில் அனைத்து இடங்களின் நாங்கள் இன்னும் சற்று கூடுதலாக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்க வேண்டும். இன்றைய பந்துவீச்சு எங்களுக்கு சரியாக அமையவில்லை. மோசமாக அமையும் நாட்களில் இதுவும் ஒன்று என நான் உணர்கிறேன்.

    பேட்டிங்கில் இலக்கு மிகப்பெரியது என்பதால் கடினமானதை நோக்கி செல்ல வேண்டி இருக்கும் என நாங்கள் பேசினோம். அந்த வகையில் நாங்கள் பேட்டிங்கை அணுகினோம். சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை அணுகினோம்.

    விசாகப்பட்டினம் மைதானத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. நாங்கள் டைமரை (ரிவியூ கேட்பதற்கான வினாடிகள்) ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லை. ஸ்கிரீனில் சில பிரச்சனைகள் இருந்தது.

    சில விஷயங்களை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு அணியாகவும், தனிநபராகவும் அடுத்த பேட்டிக்கு சிறந்த முறையில் வலிமையாக திரும்ப வேண்டியததை பிரபதிபலிக்கம் நேரம் இது.

    நான் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து விளையாடுகிறேன். கிரிக்கெட்டில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால் தனிப்பட்ட நபராக உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 272 ரன்கள் குவித்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி சென்ற டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ×