search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal Production"

    • நடப்பு நிதியாண்டில், கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது.
    • மதிப்பீட்டு மாதங்களில் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி சுமாா் 47.81 கோடி டன்னிலிருந்து 15.23 சதவீதம் அதிகரித்து 55.10 கோடி டன்னாக உயா்ந்துள்ளது.

    இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகள் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக அபரிமித வளா்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து படிம எரிபொருளை இறக்குமதி செய்வது கணிசமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில், கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 60.20 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

    மதிப்பீட்டு மாதங்களில் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி சுமாா் 47.81 கோடி டன்னிலிருந்து 15.23 சதவீதம் அதிகரித்து 55.10 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. மின் நுகா்வு தொடா்ந்து அதிகரித்து வருவதால் நிலக்கரிக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது.

    நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 73.10 கோடி டன்னாக இருந்து 2021-22-இல் 77.82 கோடி டன்னாக அதிகரித்தது. இது 6.47 சதவீத வளா்ச்சியாகும். 2024-25-ஆம் நிதியாண்டில் 131 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரித் துறை அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இது 2030-ஆம் நிதியாண்டில் 150 கோடி டன்னாக உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 75.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
    • 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக நிலக்கரியை உற்பத்தி செய்தன.

    மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் 11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

    நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.

    மின்சார உற்பத்திப் பயன்பாட்டுக்கு நிலக்கரி அனுப்பப்படுவது நடப்பாண்டில் 3.55% அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் வரை 16.28% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிலக்கரி உற்பத்தி 38.2 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு பெரிய அளவில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை படைத்திருப்பதாக ''கேர்எட்ஜ்'' ஆய்வு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 2023-ம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 35 கோடி டன்னை தாண்டும் என அது ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி தற்போது நிலக்கரி உற்பத்தி 38.2 கோடி டன்னை எட்டி புதிய சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 21 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு பெரிய அளவில் உள்ளது.

    நிதியாண்டின் அடுத்த அரையாண்டில் நிலக்கரி உற்பத்தி 50 கோடி டன்னை எட்டும் என ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

    ×