நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நடப்பாண்டில் 16.28% அதிகரிப்பு- மத்திய அரசு

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 75.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக நிலக்கரியை உற்பத்தி செய்தன.
நிலக்கரி சுரங்கம்(கோப்பு படம்)
நிலக்கரி சுரங்கம்(கோப்பு படம்)
Published on

மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் 11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.

மின்சார உற்பத்திப் பயன்பாட்டுக்கு நிலக்கரி அனுப்பப்படுவது நடப்பாண்டில் 3.55% அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் வரை 16.28% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com