search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby games"

    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

    முதல் ஆறு மாதம் வரை குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.

    கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

    ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

    1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.

    தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

    முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.
    கோடை விடுமுறையில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
    கோடை விடுமுறையில் ஒரு வாரமோ, இரு வாரங்களோ பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.

    1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.

    2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.

    3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.

    4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.

    5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.

    இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள். 
    குழந்தைகளே நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா?

    செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.

    “குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.



    கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.

    விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.

    செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.

    இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!
    ×