search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW X5 SUV"

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்5 எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWX5



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

    அந்த வகையில் முதலாவது காராக பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எஸ்.யு.வி. அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் மே மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டீசல் 

    என்ஜின் மாடலையும் பின்னர் பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 



    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 காரில் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய மாடல் கார் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்5 வரிசையில் ஐந்தாவது தலைமுறை மாடலாகும். 

    காரில் இது மிகவும் நீளமானது. இதன் அகலமும், உயரமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகம். விரிவுபடுத்தப்பட்ட இந்த இடவசதி பயணிகள் சவுகரியமாக பயணிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 4,921 மி.மீ., அகலம் 1,970 மி.மீ., உயரம் 1,737 மி.மீ. ஆகும். 

    இதன் சக்கரங்கள் 2,975 மி.மீ. அளவில் இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சொகுசாக நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
    ×