search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "antique statues"

    இந்தியாவில் இருந்து திருடப்பட்டு, அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த 2 பழங்கால சிலைகளை, அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. #India #US #AntiqueStatues
    நியூயார்க்:

    இந்தியாவில் அரசர்களின் சிலைகளும், தெய்வங்களின் சிலைகளும் மிகவும் புனிதமானதாகவும், விலை மதிப்பற்றத்தாகவும் பாதுகாக்கப்படுவது வழக்கம். இதனால், இந்த சிலைகள் மீது ஆர்வம் கொண்ட கொள்ளை கும்பல் சிலைகளை திருடி, வெளிநாடுகளில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி என்ற சிலையும், பீகார் மாநிலத்தின் போத் கயா ஆலையத்துக்கு அருகில் இருந்து திருடப்பட்ட மஞ்சூஸ்ரி என்ற சிலையும் திருப்பி அளிக்கப்பட்டது.

    இந்த 2 சிலைகளும், அமெரிக்காவின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி சிலை, சிவபெருமானை பிரதிபலிப்பதாக வடிக்கப்பட்டது என்றும் சோழர் காலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இந்த சிலையின் தற்போதைய விலை 2 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல், வாள் ஏந்திய நிலையில் இருக்கும் மஞ்சூஸ்ரி சிலையின் மதிப்போ 2 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிலை 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என ஆய்வுகள் கூறுகின்றன.

    இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்தியாவின் உயர்தூதரான சந்தீப் சக்ரவர்த்தியிடம் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் சைரஸ் வழங்கினார். #India #US #AntiqueStatues
    ×