search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4G Network"

    கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழகத்தில் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.

    தமிழகத்தில் 4ஜி சேவைகளை துவங்கிய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இத்துடன் மாநிலத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் துவங்கி கிராம பகுதிகள், நெடுஞ்சாலைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் அதிவேக மொபைல் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ ஏர்டெல் கட்டமைத்திருக்கிறது.

    தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் சேவையை இதுவரை சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


    'ப்ராஜக்ட் லீக் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக சேவை வழங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத் தேவைக்கு ஏற்ற இணைய கட்டமைப்புகளை உருவாக்க தொடர்ந்து முதலீடு செய்வோம்." என தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்துக்கான ஏர்டெல்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி தெரிவித்தார். 
    ×