search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 Years Of Modi"

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் ஒடிசாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். #4YearsOfModi #4YearsOfModiGovt #NarendraModi
    புவனேஷ்வர் :

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :- 

    நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும்.
    சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்த அரசின், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் என அனைவரும் வறுமையில் வாழ்ந்தவர்களே ஆவர்.

    இந்த நான்கு ஆண்டுகளில் 125 கோடி இந்திய மக்களுக்கும் இந்தியாவை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அதனாலேயே மோசமான ஆட்சியில் இருந்து இந்தியா நல்ல ஆட்சியில் சென்று கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தது, என்ன மாதிரியான சூழலில் இருந்தது, அதற்காக இந்த நாட்டை 48 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு குடும்பம் என்ன செய்தது என்பதை மக்கள் நினைவுகூற வேண்டும்.

    கறுப்பு பணத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்த போது இங்கு குழப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 3 ஆயிரம் சோதனைகளின் போது, கணக்கில் வராத 73 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் நடத்தப்பட்டது. இதனால், பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தற்போது ஒன்றாக இணைந்துள்ளனர்.

    பாஜகவின் சிறப்பான ஆட்சியினால் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற நடவடிக்கைகளில் இறங்கும் வலிமை பெற்றுள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பங்கேற்க கட்டாக் வந்த பிரதமர் மோடியை வரவேற்க அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் ஆகியோர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #4YearsOfModi #4YearsOfModiGovt #NarendraModi
    கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என காங்கிரஸ் கட்சி இன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. #4YearsOfModi #4YearsOfModiGovt
    புதுடெல்லி :  

    பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    இதை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அனைத்து மாநில தலைநகரங்களிலும் தலைவர்கள் அரசின் சாதனையை மக்களிடம் விளக்கி சொல்லும்படி கட்சி தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் “துரோகம்” என்ற புத்தகத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவருவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் அவினாஷ் பாண்டே, “மோடி தலைமையிலான பாஜக அரசில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.  2 கோடி புதிய வேளைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி கடந்த 2016-17-ம் ஆண்டில் வெறும் 4.16 லட்சம் வேலைவாய்ப்புகளையே உருவாக்கியுள்ளார்.

    நாட்டில் உள்ள சிறுபானமையினர், தலித் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இளைஞர்கள், விவசாயிகள்,  தொழிலதிபர்கள் அனைவரும் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக உணர தொடங்கியுள்ளனர்.
     
    எனவே,  நாட்டு மக்களிடையே மோடி அரசை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த ஆட்சிக்கு எதிரான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்” என தெரிவித்தார்.

    மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியை பற்றி கருத்து கூறிய காங்கிரஸ் மேலிட  தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜக  ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை , ஒவ்வொருவரும் தினம்தோறும் தூக்கமற்ற இரவை கழித்து வருகின்றனர் என சாடியுள்ளார்.  

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் நாட்டிற்கு பெரும் தீங்கு, மோடி அரசின் 4 ஆண்டு கால ஆட்சியை  நம்பிக்கை துரோகம், தந்திரம், பழிவாங்குதல் மற்றும் பொய்கள் என 4 வார்த்தைகளில் வரையறுத்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.  #4YearsOfModi #4YearsOfModiGovt 

    ×