search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2.62 lakhs people benefit"

    • 2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
    • பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 411 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சுனில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 26 இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 21-ம், அதிநவீன உயிர் காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் 3-ம், பச்சிளங்குழந்தை களுக்கான ஆம்புலன்ஸ்கள் 2-ம் இயக்கப்பட்டு வரு கின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 108 சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 370 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 67 ஆயிரத்து 734 பேர்களும், சாலை விபத்துக்களில் 51 ஆயிரத்து 11 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 46 ஆயிரத்து 625 பேர்களும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இதில் பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 411 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.

    மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 450 கர்ப்பிணி தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை பெற்றெடுத்து, பின்னர் சிசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×